திமுகவின் ‘ரூட்’ தூக்கப் போகும் முதல்வர் விஜய்?…. மாநகராட்சிகளைக் கலைக்கப் பாயும் புதிய உத்தரவு…. ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த ஷாக்…!

By Nanthini on புரட்டாதி 7, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த மிகப்பெரிய அரசியல் சவாலாக வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் உருவெடுத்துள்ளது. மாநிலத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றிருந்தாலும், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் எதிர்க்கட்சியான திமுகவின் வலுவான கட்டமைப்பு இன்னமும் நீடித்து வருகிறது. இந்த அடிமட்ட அரசியல் செல்வாக்கை உடைத்து, உள்ளாட்சி அமைப்புகளையும் முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தவெக தீவிரமான அடுத்தகட்ட வியூகங்களை வகுத்து வருகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவதற்காகக் கடந்த ஜூன் மாதத்திலிருந்தே தவெக தனது முதற்கட்டக் களப்பணிகளைத் தொடங்கிவிட்டது. மாற்றுக் கட்சிகளில் செல்வாக்குடன் விளங்கிய இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அனுபவமிக்க உள்ளூர் நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் “சமூகத் தணிக்கை” மூலம் குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை முன்வைத்து மக்கள் மத்தியில் களப்பணியாற்ற திட்டமிடப்பட்டுள்ளதோடு, கட்சி அமைப்பை 234 மாவட்டங்களாக விரிவுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

   

இந்த அரசியல் வியூகத்தின் முக்கிய நகர்வாக, மாநகராட்சிகளின் பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அவற்றை முன்கூட்டியே கலைப்பது குறித்து தவெக அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநகராட்சிகள் கலைக்கப்பட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட மன்றங்களுக்குப் பதிலாகத் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிர்வாகம் அரசின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு வரும். அதன் பிறகு ஆறு மாதங்களுக்குள் தேர்தலை நடத்தி, திமுகவின் உள்ளூர் அதிகார அமைப்பை உடைத்து புதிய சூழலில் தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், கடந்த ஆட்சியில் மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளை முக்கியப் பிரச்சார ஆயுதமாகப் பயன்படுத்தவும் கட்சி ஆயத்தமாகி வருகிறது.

   

இத்திட்டங்கள் குறித்துத் தவெகவின் மூத்த அமைச்சர்கள் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ள நிலையில், மாநகராட்சிகளைக் கலைப்பது தொடர்பான இறுதி முடிவை அவரே எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி அமைப்பைப் பலப்படுத்துவது, உள்ளூர் செல்வாக்குமிக்கவர்களை இணைப்பது மற்றும் நிர்வாக ரீதியான மாற்றங்களைச் செய்வது என பல அடுக்குகளாக தவெகவின் தயாரிப்புகள் அமைந்துள்ளன. இத்திட்டங்கள் நடைமுறைக்கு வரும்பட்சத்தில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் வெறும் பதவிகளுக்கான தேர்தலாக மட்டுமில்லாமல், அடிமட்ட அரசியலிலும் தவெக தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான மிக முக்கிய அரசியல் பரீட்சையாக அமையும்.