வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சியில் இன்று நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்திலிருந்து தி.மு.க-வைச் சேர்ந்த நகர்மன்றத் தலைவர் சௌந்தரராஜன், கவுன்சிலர்களுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்தார். நகராட்சியில் கொண்டுவரப்படும் திட்டப்பணிகள் மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறிய சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநடப்பு செய்தபின் ஊடகங்களிடம் பேசிய சௌந்தரராஜன், “ஸ்டாலின் ஆட்சியில் நகராட்சி பொதுநிதி மூலம் நாங்கள் செய்துமுடித்த சாலை திட்டப்பணியை, ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள்கூட ஆகாத குடியாத்தம் த.வெ.க எம்.எல்.ஏ சிந்து, தானே செய்ததுபோல வெக்கமில்லாமல் திறந்து வைத்து பல்லிளிக்கிறார். இந்த பணியை சிறப்பாகச் செய்தது யார் என்று அழைத்து சால்வைகூட போற்றவில்லை; எம்.எல்.ஏ-வின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும், இந்த ஆட்சியில் இதுவரை சட்டமன்ற நிதி என 5 பைசாகூட ஒதுக்கப்படவில்லை” எனக் காட்டமாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “பொதுமக்கள் செலுத்தும் சொத்துவரி மற்றும் குழாய் வரி மூலமே நகராட்சியின் பொது நிதி பெறப்பட்டு முக்கியமான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இப்போது, ‘பொது நிதியை எடுத்து எந்த பணிகளையும் செய்யக் கூடாது’ எனத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக ஆணையர் கூறுகிறார். டெண்டர் வைக்கக் கேட்டால் மேலிருந்து உத்தரவு வரவில்லை எனக் காரணம் சொல்கின்றனர். அரசின் இந்த முடக்கத்தையும், அதிகாரிகளின் போக்கையும் கண்டித்துதான் நாங்கள் நகர்மன்றக் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…
6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…
சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…
மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…