“தேர்தலில் ஊதியது விசில் இல்ல… சங்கு”…. ரூ.5,000 டூ ரூ.28,000… சென்னை மக்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… ஒரே அடியாக கவிழ்த்த விஜய் அரசு..!

By Nanthini on ஆவணி 13, 2026

Spread the love

சென்னை மாநகராட்சியில் குப்பை மேலாண்மை, தெருவிளக்குகள், சாலை மற்றும் பூங்காக்கள் பராமரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொதுப் பணிகளுக்கு சொத்து வரியே முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்குகிறது. இருப்பினும், வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களுக்கான சொத்து வரி திடீரென 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் கட்டிட உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னறிவிப்பின்றி ரூ. 5,000 ஆக இருந்த கட்டணம் ரூ. 28,000 வரை உயர்த்தப்பட்டுள்ளதால், பொருளாதார ரீதியாக மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஏற்கனவே மின்கட்டண உயர்வால் தவித்து வரும் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு, இந்த சொத்து வரி உயர்வு கூடுதல் சுமையாக மாறியுள்ளது. இக்கட்டண உயர்வால் சென்னையில் வீட்டு வாடகையும் கணிசமாக உயரக்கூடும் என்பதால், மக்களின் மாதாந்திர குடும்ப பட்ஜெட்டில் பெரிய அளவிலான நிதிப் பற்றாக்குறை ஏற்படும் எனச் சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தங்களின் கடும் அதிருப்தியைப் பதிவு செய்து வருகின்றனர்.