திமுக சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும் குறிவைத்து காவல்துறை கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக குற்றம்சாட்டியுள்ளார். தனது X தளப் பதிவில், பொதுக்கூட்டம் ஒன்றில் தவெக தலைவர் விஜய்யை விமர்சித்துப் பேசியதற்காக, திமுக MLA மார்க்கண்டேயன் என்பவரின் வீட்டுக்கு அதிகாலை 6 மணிக்கே காவல்துறையை அனுப்பி கைது செய்திருப்பது உச்சபட்ச அடக்குமுறை மற்றும் பழிவாங்கும் நடவடிக்கை என்று தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அதேவேளையில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நேரடியாகக் குற்றம்சாட்டிய பிறகும், தவெகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறை இதுவரை எவ்விதக் கைது நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி அவர் சாடியுள்ளார். எதிர்க்கட்சியினரின் தவறை விடுத்து, ஆளுங்கட்சியினர் மீது மட்டும் உடனடி நடவடிக்கை எடுக்கும் காவல்துறையின் இந்த இரட்டை நிலையைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அதிகாரத்தின் மூலம் திமுகவினரை முடக்க முடியாது என்றும் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
