ஜூன் 17-ல் அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு…. ஸ்டாலின் தலைமையில் திடீர் ஆலோசனை… அலறும் சீனியர்கள்…!

By Nanthini on ஆனி 14, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 18-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜூன் 17-ஆம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், சட்டப்பேரவை நிகழ்வுகளை எதிர்கொள்வது குறித்தும், ஆளும்கட்சி கேள்விகளுக்குப் பதிலளிப்பது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.

குறிப்பாக, அண்மைக் காலமாக விவாதப் பொருளாக மாறியுள்ள பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், பெண்கள் பாதுகாப்பு, ஆங்காங்கே ஏற்படும் மின்வெட்டுப் பிரச்சினைகள் மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து சட்டப்பேரவையில் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைப்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.