BREAKING: “அதிர்ந்த தமிழக அரசியல்”…. ‘எலும்பை உடைப்பேன்’… திமுக MLA கைது… காலையிலேயே பரபரப்பு…!

By Nanthini on ஆடி 20, 2026

Spread the love

முதல்வர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததாகக் கூறி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் அவர்களின் வீட்டிற்கே சென்ற காவல்துறை அவரை அதிரடியாகக் கைது செய்துள்ளது. முன்னதாக, பொதுநிகழ்ச்சி ஒன்றில் பேசிய மார்க்கண்டேயன், “சட்டப்பேரவையைப் பூட்டினால் உன் எலும்பை உடைத்துவிடுவேன்” எனப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருந்தார்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையின் போது, அவரது இல்லத்தின் முன் திரண்ட ஆதரவாளர்கள் காவல்துறையினருக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.