எம்ஜிஆர்லாம் எம்மாத்தம், அவர விட ஸ்டாலினுக்கு தான் அதிக செல்வாக்கு… சர்ச்சையை கிளப்பிய அமைச்சர் கே.என் நேரு…!

By Divyamayakannan on ஆவணி 24, 2025

Spread the love

தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகி கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், நெல்லை மாவட்டத்தில் பாஜக பூத் கமிட்டி மாநாடு ஆகஸ்ட் 22, 2025 ஆம் நாள் நடந்தது. மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திமுக கட்சியை கடுமையாக விமர்சித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது எண்ணமே அவருடைய மகன் உதயநிதியை முதல்வர் ஆக்குவது தான். ஆனால் ஒரு பொழுதும் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவே முடியாது. செந்தில் பாலாஜி மற்றும்  பொன்முடி ஆகியோர் சிறையில் இருந்தவர்கள் இருப்பினும்  இதுவரை ஆட்சியில் இருக்கின்றன.

இதுப்போன்ற விமர்சனத்திற்கு திமுக அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக திமுக தொடர் வெற்றியை பெற்று வருகிறது. அடுத்த ஆட்சியும் திமுகவுக்கே என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று கூறுகிறார்கள். ஆனால் அது அவர்களது ஆசை மட்டுமே, மீண்டும் நாங்களே வென்று வருவோம் என்று நேரு பதில் அளித்துள்ளார். அதேபோல் எம்.ஜி.ஆ.ருக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கே  பெண்களின் ஆதரவு அதிகம் உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெண்களின் ஆதரவுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தவெக மற்றும் திமுக க்கு போட்டி என்றுக் கூறிவருகிறார்கள், ஆனால் திமுகவுக்கு எந்த போட்டியும் இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார்