தெலுங்கானா முத்தக்யாசாராம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன்- ரேணுகா இவர்கள் இருவரும் வேலைக்கு செல்பவர்கள். இவர்களது மகள் சஹஸ்ரா(10), 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் சென்று விட்டதால் சிறுமி தனிமையில் வீட்டில் இருந்துள்ளார். வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த பெற்றோருக்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அவர்களது மகள் சஹஸ்ரா இரத்த வெள்ளத்தில் இறந்துக் கிடந்துள்ளார்.
இச்சம்பவம் தெரிந்து விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வுச்செய்தில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை விசாரித்து வருகின்றனர். அந்த மாணவன் கிரிக்கெட் பேட் மற்றும் பணத்தை திருடுவதற்காக சஹஸ்ராவை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். சம்பவத்தன்று கிரிக்கெட் பேட்டை திருடுவதற்காக வீட்டுக்குள் நுழைந்த போது அச்சிறுமி கத்திக் கூச்சலிட்டதால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கத்தியை எடுத்து சிறுமியைக் குத்திக் கொன்றுள்ளான் .
பிரேத பரிசோதனையின் முடிவில் உடல் முழுவதும் 20 இடங்களில் கத்திக் குத்தி கிழித்து இருப்பது தெரியவந்துள்ளது. பின்பு சிறுமியின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இந்த மாணவன் வீட்டை சோதித்ததில் பேட்டை மற்றும் பணத்தை எப்படித் திருட வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்துள்ளான். அவன் கைப்பட எழுதி வைத்திருக்கும் கடிதத்தை கைப்பற்றி மாணவனை நீதிமன்றத்தில் ஆஜர்செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
