நேற்று விஜய் இன்று ஸ்டாலின்… மாமல்லபுர ரிசாட்டிற்கு வந்த 3000 பேர்… அதிரடியில் இறங்கிய திமுக..!!

By Soundarya on ஐப்பசி 28, 2025

Spread the love

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் மாமல்லபுரத்திற்கு வரவழைத்து மண்டபத்தில் அவர்கள் தங்கவைக்கப்பட்டு நேற்று ஆறுதல் தெரிவித்தார். அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம், நடிகர் விஜய் மிகுந்த வேதனையுடன் மன்னிப்பு கேட்டு கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் கரூர் மக்களின் நீண்டகால தேவைகளை விஜய் கேட்டறிந்தார். இந்நிலையில் கரூர் மக்களை நேற்று விஜய் சந்தித்த அதே மாமல்லபுரம் ரிசார்ட்டில் திமுகவின்  ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ கூட்டம் இன்று நடைபெறுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலுக்காக திமுக பல முன்னேற்பாடுகளை செய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் கட்சி நிர்வாகிகளுக்கு முதல்வர்  ஸ்டாலின் பயிற்சி வழங்குகிறார். இதில், MP, MLA, மாவட்ட செயலாளர்கள், கிளை செயலாளர் என சுமார் 3,000 பேர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.