சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பொன்னகர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவர் கட்டுமான தொழில் செய்து வந்தார். பாரதிய ஜனதா சாக்கோட்டை ஒன்றிய துணைத் தலைவராகவும் பழனியப்பன் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் பழனியப்பன் கட்டுமானப் பணிகளை பார்வையிட சென்ற போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் வெட்டியது.
இதனால் படுகாயமடைந்த பழனியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பழனியப்பன் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
