சிவங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வெறும் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தோல்வியடைந்ததை எதிர்த்து, திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தேர்தல் முடிவை எதிர்த்து பெரியகருப்பன் தொடர்ந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வழக்கை முழுமையாக நிராகரித்து சீனிவாச சேதுபதியின் வெற்றியை உறுதிசெய்து தீர்ப்பளித்துள்ளார்.
