விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறிகள் நீடிக்கின்றன. இந்தச் சூழலில், மதுரையில் நடைபெற்ற மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர், கடந்த கால கசப்பான அரசியல் நிகழ்வுகளைப் பகிரங்கமாக முன்வைத்துள்ளார்.
குறிப்பாக, 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்ததற்கு திமுக தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். திமுகவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் சில தலைவர்கள் செய்த ஊழல்களே ஆட்சியின் வீழ்ச்சிக்கு அடித்தளமிட்டதாகக் குறிப்பிட்டார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் அது சார்ந்த பணமோசடி வழக்குகளால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்குக் கெட்டப் பெயர் ஏற்பட்டதை அவர் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.
திமுகவின் மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ கோ.தளபதி அண்மையில் காங்கிரஸின் பலத்தைக் குறித்துக் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மாணிக்கம் தாகூரின் இந்தப் பேச்சு அமைந்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளால் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க காங்கிரஸ் பல ஆண்டுகளாகப் போராடி வருவதாகவும், இதற்குக் காரணமானவர்கள் தங்கள் தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், வரவிருக்கும் தேர்தலில் காங்கிரசுக்கு அதிக இடங்களும், ஆட்சியில் பங்கும் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தையும் அவர் முன்வைத்தார்.
கூட்டணி தர்மத்தைப் பேண வேண்டிய கட்டாயத்தில் இருந்தாலும், தொகுதிப் பங்கீட்டில் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதை மாணிக்கம் தாகூரின் இந்த அதிரடி பேச்சு வெளிப்படுத்துகிறது. நீதிமன்றத்தால் ஆ.ராசா, கனிமொழி போன்றோர் விடுவிக்கப்பட்டிருந்தாலும், அரசியல் ரீதியாக அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் காங்கிரஸை எப்படிப் பாதித்தன என்பதை அவர் சல்லி சல்லியாய் உடைத்துப் பேசியிருப்பது தமிழக அரசியலில் விவாதங்களை கிளப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…