திமுகவின் “சைலன்ட்” ஆட்டம்… கருணாஸ் முதல் கொமதேக வரை.. யாருக்கு எத்தனை தொகுதி?…. அறிவாலயத்தில் நடந்து முடிந்த சீக்ரெட் டீல்….!

Spread the love

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ குழு இன்னும் அமைக்கப்படாத நிலையிலும், திரைக்குப் பின்னால் பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. முதல்வர் ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு ஆகியோர் மூலமாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் ரகசியமாக நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்குவது குறித்து ஓரளவிற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், சிறிய கூட்டணிக் கட்சிகளான வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதில் ஒரு சுவாரஸ்யமான திருப்பமாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனக்கு பண்ருட்டி தொகுதிக்கு பதிலாக நெய்வேலி தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குழு அமைப்பதற்கு முன்பே அமைச்சர்கள் வாயிலாக இந்த “டீல்” முடிக்கப்பட்டுவிட்டதால், வரும் நாட்களில் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மிக விரைவாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“மொத்தமா போச்சு”… 20-ஐ அள்ளித் தரும் அதிமுக… விஜய்க்கு விஜயபாஸ்கர் திடீர் ஆதரவு… எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்…!

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் முன்னெப்போதும் இல்லாத ஒரு அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பெரும் கட்சியாக…

1 minute ago

“2029 லோக்சபா தேர்தலிலும் திமுக உடன் கூட்டணி கிடையாது”…. இனி தவெகவுடன் தான் கூட்டணி…. அறிவாலயத்தை அதிரவைத்த ராகுல் காந்தி…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்து, புதியதொரு அத்தியாயம் தொடங்கியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக திமுக-வுடன் நீடித்து…

7 minutes ago

“விஜய் போட்ட ஸ்கெட்ச்.. கலங்கிய எடப்பாடி”… 30 எம்.எல்.ஏ.க்களுடன் தாவும் சி.வி.சண்முகம்… துரந்தர் ஸ்டைலில் திக் திக் திருப்பம்….!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் இன்று காலை முதலே போர்க்களமாக மாறியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம்…

19 minutes ago

BREAKING: மதியம் 3 மணி… ஆளுநர் மாளிகையில் க்ளைமாக்ஸ்… விஜய்யின் கையில் இருக்கும் அந்த ‘ரகசிய’ கடிதம்…!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பிற்பகல்…

26 minutes ago

BREAKING: திமுக கூட்டணி உடைந்தது.. ஸ்டாலினுக்கு அடுத்த அடி…. மொத்தமாக தூக்கிய விஜய்….!

தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக, திமுக கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகளாக அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி…

31 minutes ago

“திடீர் திருப்பம்!… விஜய்யை ஆதரிக்கத் தயார்… ஆனா ஒரு கண்டிஷன்… காங்கிரஸ் போட்ட ‘கறார்’ நிபந்தனையால் ஆடிப்போன அரசியல் களம்”…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ள நிலையில், ஆட்சியைப் பிடிக்கத் தேவையான 10 இடங்களுக்காகத் தமிழக…

37 minutes ago