தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. ஆனால் கூட்டலில் இருக்கும் ஒரு சில கட்சிகள் கூடுதல் தொகுதி கேட்பதோடு ஆட்சியில் பங்கு என்றும் குரல் எழுப்பி வருவதால் அவர்களுடன் ஸ்டாலின் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியிலும் திமுக தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் நெல்லை மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் சந்திரசேகர் திமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்து ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்துள்ளார். அவர் சொன்ன காரணம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. நெல்லையிலிருந்து ஏராளமான கனிம வளங்கள் கேரளாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் பலமுறை எடுத்துக் கூறியும் எந்த பலனும் இல்லாததால் கட்சியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி திருப்பங்களைக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி தமிழக அரசியலில் ஒரு…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மகத்தான…
தமிழக அரசியல் வரலாற்றில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு நேரடித் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருப்பது…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஒரு மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்…