திமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் கட்சி மாறும் சூழல் நிலவுவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, தென்தமிழகத்தைச் சேர்ந்த ‘பாடகர்’ என அறியப்படும் முன்னாள் அமைச்சர் ஒருவர், தமிழக வெற்றிக் கழகத்தின் கதவுகளைத் தட்டி வருவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே அதிமுகவின் சில முக்கிய தலைவர்கள் தவெக பக்கத்திற்குச் சென்ற நிலையில், இப்போது திமுகவின் உட்கட்சிப் பூசல்களும் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.
கூறப்படும் அந்த முன்னாள் அமைச்சர், சமீபத்தில் தனக்குள்ள சமுதாயச் செல்வாக்கைக் காட்டும் வகையில் சிறுபான்மையினர் மாநாடு ஒன்றை நடத்தியுள்ளார். இருப்பினும், அந்த மாநாட்டிற்கு ஆட்களைத் திரட்ட திமுகவின் உள்ளூர் நிர்வாகிகளையே அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சொந்தக் கட்சியின் பலத்தைப் பயன்படுத்திவிட்டு, அதை அப்படியே மற்றொரு கட்சிக்குத் மாறுவதற்கான தளமாக மாற்றுவது அங்கிருக்கும் உடன்பிறப்புகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழல்கள் குறித்து பல்வேறு விதமான அரசியல் கணிப்புகளும் செய்திகளும் உலா வருகின்றன. திமுகவின் முக்கியத் தலைவர்கள் பலரின் அரசியல் நகர்வுகள் மற்றும் வாய்ப்புகள் குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், திமுக தலைமை பல இடங்களில் நிர்வாக மாற்றங்களைச் செய்து கட்சி அமைப்பைப் பலப்படுத்த யோசித்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதற்குப் பனையூர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு வரும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும், உள்ளூர் திமுக மற்றும் தவெக வட்டாரங்களின் எதிர்ப்புகள் காரணமாக, புதிய சேர்க்கைகள் குறித்த முடிவுகளைத் தவெக தலைமை நிதானமாகப் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…
மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சூர் மாவட்டம் ம மதார்புரா பகுதியைச் சேர்ந்த 32 வயதான இஸ்மாயில் என்பவரை, அவரது வீட்டை…