கோவை மாநகர திமுக மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ நா. கார்த்திக் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக செந்தமிழ்ச்செல்வன் அப்பதவியில் நியமிக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்துள்ளார். உடல்நல பிரச்சனையால் மாவட்ட செயலாளர் பொறுப்பை சரியாக கவனிக்க முடியாததால் அவரை அந்த பொறுப்பிலிருந்து தலைமை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் இந்த திடீர் மாற்றம் அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
