தவெக – காங்கிரஸ் கூட்டணி… SAC சொன்ன வார்த்தை… “இனி விஜய் தான் அறிவிப்பார்” தவெக அதிரடி அறிவிப்பு…!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்தால் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் அதிகாரம் கிடைக்கும் என நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்  கருத்து தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சி நீண்ட பாரம்பரியம் கொண்டிருந்தாலும், மற்ற கட்சிகளைத் தொடர்ந்து ஆதரிப்பதாலேயே தனது பலத்தை இழந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார். விஜய்யுடன் கைகோர்ப்பதன் மூலம் காங்கிரஸ் இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து மீண்டும் வரலாறு படைக்கலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்தக் கருத்துக்குப் பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, “எங்களுக்கு யாரும் பூஸ்ட் தரத் தேவையில்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், காங்கிரஸ் கட்சி தற்போதைய திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக இருப்பதாகவும், கூட்டணி குறித்த முடிவுகளை அகில இந்திய காங்கிரஸ் தலைமை உரிய நேரத்தில் எடுக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். தனிநபர்கள் கூட்டணி குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.

இதற்கிடையில், தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறுகையில், எஸ்.ஏ.சந்திரசேகர் விடுத்த அழைப்பு என்பது மக்களின் பொதுவான கருத்தாகவே பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார். கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனையில் விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும், கூட்டணி குறித்துத் தனது இறுதி முடிவை விஜய் சரியான நேரத்தில் அறிவிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது தவெகவின் தனித்துவமான கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Soundarya

Recent Posts

இதயம் இன்னும் படபடக்குது… இருளில் நேரில் கண்ட திகில் காட்சி… ஆன்மாவையே நடுங்க வைத்த அந்த ஒரு நொடி… தீபாவளி அமாவாசை இரவில் நடந்தது என்ன?…!!

தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…

3 minutes ago

இப்படியொரு துணிச்சலா?… வாகனத்திலிருந்து பையை அபேஸ் செய்த மர்ம நபர்… சிக்கன் கடை வாசலில் நடந்த பகீர் சம்பவம்…!!

சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…

8 minutes ago

“Confident-ah இருங்க”-ன்னு சொன்னது குற்றவாளிகளுக்கா?… கள்ள மௌனத்தை கலைப்பாரா முதல்வர் விஜய்?… எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

28 minutes ago

தமிழகத்தில் என்னதான் நடக்கிறது?… Law & Order எங்கே போச்சு?… 12 பேர் மாயமான விவகாரத்தில் அரசை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய வானதி சீனிவாசன்…!!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி…

34 minutes ago

இது சரியா? தவறா?… ‘நோ என்ட்ரி’!… 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடை… பரபரப்பை கிளப்பிய ஹோட்டல்… விதிமுறையால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்…!!

கனடாவின் வின்னிபெக் நகரில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள 'மிஸ் கிறிஸ்டின்ஸ் கிச்சன்' என்ற ஜமைக்கன் உணவகம், 15 வயதுக்கு உட்பட்ட…

40 minutes ago

அடகடவுளே..! நொறுங்கிய மின்சார ரிக்‌ஷா… தடுப்புகள் இல்லாததால் விபரீதம்… தவறி விழுந்த ஓட்டுநர்… பதைபதைக்க வைக்கும் விபத்து…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜலான் பகுதியில், பால் கேன்களை ஏற்றிக்கொண்டு சென்ற மின்சார ரிக்‌ஷா ஒன்று, பக்கவாட்டுத் தடுப்புச் சுவர்கள்…

50 minutes ago