தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடக்கூடும் என்ற தகவல்கள் கசிந்துள்ள நிலையில், அவருக்கு கடும் சவாலளிக்க திமுக இப்போதே வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளது.
தவெகவின் நகர்வுகளை முறியடிக்கும் வகையில், வடசென்னையில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கும் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவை பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியில் கிறிஸ்தவ சமூகத்தின் ஆதரவைப் பெற்ற இனிகோ ருதயராஜையும் வேட்பாளர்களாகக் களமிறக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய்யின் அரசியல் வருகையால் ஏற்படும் தாக்கத்தை ஈடுகட்டவும், தனது கோட்டைகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் திமுக முன்னெடுத்துள்ள இந்தத் திட்டமிட்ட காயநகர்த்தல்கள், வரவிருக்கும் தேர்தல் களத்தை மிகுந்த பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.
