மதுராந்தகம் & தாராபுரம் இடைத்தேர்தல்… தட்டி தூக்குங்க…. ஒரே போடாக போட்ட ஸ்டாலின்…. வேட்பாளர்கள் பட்டியல் இதோ….!

By Nanthini on புரட்டாதி 11, 2026

Spread the love

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசலால் 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்தனர். வழக்கு நிலுவையில் உள்ளதால் 5 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்தத் தடை விதிக்கப்பட்ட நிலையில், காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, வருகிற அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான உடனடியாகவே களத்தில் குதித்துள்ள திமுக, இரு தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்து மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமனும், தாராபுரம் (தனி) தொகுதிக்கு வழக்கறிஞர் சுகன்யாவும் திமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதில் திமுக தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது.

   

தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், வெற்றியை உறுதி செய்யவும் முக்கிய நிர்வாகிகளைப் பொறுப்பாளர்களாக நியமித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மதுராந்தகம் தொகுதிக்குத் தா.மோ.அன்பரசன் மற்றும் க.சுந்தர் ஆகியோரும், தாராபுரம் தொகுதிக்கு மு.பெ.சாமிநாதன் மற்றும் இல.பத்மநாபன் ஆகியோரும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர்களின் வெற்றிக்கு அருகில் உள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களும், நிர்வாகிகளும் இணைந்து அயராது பாடுபட வேண்டும் என திமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

   

கடந்த 100 நாட்களில் தவெக அரசின் செயல்பாடு மற்றும் சட்டமன்றத்தில் அமைச்சர்களின் பேச்சுக்கள் மீது எழுந்துள்ள விமர்சனங்களை முன்வைத்து திமுக தீவிர பிரச்சாரத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், தமிழகத்தின் புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழ் சான்றோருமான சாலமன் பாப்பையாவின் மறைவு ஒருபுறம் தமிழ் உலகைச் சோகத்தில் ஆழ்த்தியிருந்தாலும், மற்றொருபுறம் அரசியல் கட்சிகளின் நகர்வுகளால் தமிழகத்தின் தேர்தல் களம் தற்போதே உச்சக்கட்ட சூட்டை எட்டியுள்ளது.