தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலேயே, திமுகவும் தமிழக வெற்றிக் கழகமும் இணைந்து செயல்பட வேண்டும் எனத் தான் கூறியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். முன்னதாக, கூட்டணி குறித்த அவரது கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களையும் பல்வேறு விமர்சனங்களையும் கிளப்பியிருந்த நிலையில், தற்போதைய தனது நிலைப்பாட்டை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், தேசிய அளவிலான அரசியல் சூழலை அடிப்படையாகக் கொண்டு தான் முன்வைத்த இந்த பரந்த நோக்கிலான கருத்தை, வெறும் மாநில அரசியலை மட்டுமே உற்றுநோக்கும் தமிழக அரசியல்வாதிகளால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
