பிரபல பாலிவுட் நடிகர் ராஜேஷ் சர்மா, ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடிகர் பிரபாஸின் ‘Fauzi’ படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தபோது விஷப்பூச்சி கடித்ததால், தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். பூச்சி கடித்ததைத் தொடர்ந்து உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மேல் சிகிச்சைக்காக மணிபால் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
‘M.S. Dhoni: The Untold Story’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்ற இவரின் இந்த திடீர் உடல்நலக்குறைவு திரைத்துறையினரிடையேயும், ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் விரைவில் குணமடைய பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
