பாஜக போன்ற மதவாத மற்றும் வகுப்புவாத சக்திகளை வீழ்த்த தமிழகத்தில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிடுவது என்பது வேறு விஷயம் என்றும், ஆனால் மதவாத சக்திகளை எதிர்த்து நிற்பதில் அவை ஒரே நேர்க்கோட்டில் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வகுப்புவாதத்திற்கு எதிராக இரு கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும் என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் கருத்து முற்றிலும் ஏற்புடையது என வரவேற்றுள்ள அவர், தவெக – திமுக மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டியது தற்போதைய சூழலில் மிகவும் அவசியம் என்றும் தனது அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
