BREAKING: SIR-க்கு எதிராக திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்… சற்றுமுன் அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 6, 2025

Spread the love

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை (SIR) எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் நவம்பர் 11ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்படும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே SIR பணிக்கு எதிராக தமிழக முதல்வர் உட்பட திமுக கூட்டணி தலைவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர். தற்போது திமுக கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.