“காலம் கலிகாலம் ஆகி போச்சுடா”… 19 வயது பெண்ணுக்கும் 20 வயது பெண்ணுக்கும் திருமணம்… பெற்றோர் எதிர்ப்பை மீறி கிராம மக்கள் செய்த செயல்…!

By Nanthini on கார்த்திகை 6, 2025

Spread the love

மேற்குவங்க மாநிலத்தின் சுந்தர பன்ஸ் என்ற பகுதியில் இரண்டு இளம் பெண்கள் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இளம் பெண்களான ரியா (19) மற்றும் ராக்கி (20) இருவரும் நடனக் கலைஞர்களாக இருந்து வருகிறார்கள். இருவருமே நீண்ட காலமாக தன் பாலின காதல் செய்து வந்த நிலையில் இருவரும் தங்கள் வீட்டில் தங்களது காதலை தெரிவித்து சம்மதம் கேட்டுள்ளனர். ஆனால் இரு வீட்டாரும் இவர்களுடைய திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் ஆதரவுடன் சமீபத்தில் ஒரு கோவிலில் இந்து முறைப்படி மாலை மாற்றி இருவருமே திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய இந்த செயலுக்கு கிராம மக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகிறார்கள். ஆரம்பத்தில் இவர்களுடைய குடும்பத்திலிருந்து எதிர்பார்க்காத ஆதரவு கிடைக்காததால் இருவரும் தனியே திருமணம் செய்து கொண்டு எளிமையாக தங்களுடைய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.