திமுக மற்றும் அதிமுக இடையே எந்தக் காலத்திலும் கூட்டணி அமைவதற்கு வாய்ப்பே இல்லை என்று கனிமொழி MP திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழகச் சட்டப்பேரவையில் இரு கட்சிகளும் இணைந்து செயல்படுவதாகக் கருத்துகள் எழுந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திமுகவின் உறுதியான அரசியல் நிலைப் பாட்டை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் புதிய அரசியல் கணக்குகளைத் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் குறித்துப் பேசிய அவர், மத்திய பாஜக அரசுக்கு எதிராக தவெக எவ்விதக் கருத்துகளையும் பதிவு செய்வதில்லை என்றும், மாநில உரிமைகளைப் பெரிதும் பாதிக்கும் கனிமவள மசோதாவுக்கு எதிராகக்கூட அக் கட்சி குரல் கொடுக்கவில்லை என்றும் மிகக் காரசாரமாகக் குற்றம்சாட்டினார்.
