தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்துக் கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வர இன்னும் ஒரு சில கட்சிகள் மட்டும் கூட்டணி தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் உள்ளன. அந்த வரிசையில் தேமுதிகவும் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளது.
இந்நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் நவம்பர் 13ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் பல முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது என கூறியுள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
