BIG BREAKING: அதிமுகவுடன் கூட்டணி… சற்றுமுன் அறிவித்தார்… அண்ணியாருக்கு ஷாக் கொடுத்த எடப்பாடியார்….!

By Nanthini on மாசி 26, 2026

Spread the love

தமிழக அரசியலில் தேமுதிக உட்கட்சிப் பூசல்கள் வலுத்து வரும் நிலையில், அக்கட்சியின் திருவாரூர் மாவட்ட முன்னாள் செயலாளர் மகா முத்துக்குமார், முன்னாள் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் இன்று தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிகவின் அதிருப்தி நிர்வாகிகள் பலரும் விரைவில் தனது தலைமையில் அதிமுகவில் இணைய உள்ளதாக அவர் அறிவித்துள்ளது அக்கட்சிக்கு மேலும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

ஏற்கனவே விருதுநகர், ராணிப்பேட்டை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தேமுதிகவிலிருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்ட தொடர் சம்பவங்கள், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், அடிமட்டத் தொண்டர்களிடையே பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.