இப்போதெல்லாம் நடிகர்கள் ரசிகர்களை சந்திப்பது பேஷனாகி விட்டது. இது ஒரு விதத்தில் ரசிகர்களை குஷிப்படுத்துவது மட்டுமின்றி இந்த ஹீரோவுக்கு இவ்வளவு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்பதை வெளியுலகத்துக்கும் தெரிவிக்கவும் இது ஒரு வாய்ப்பாகிறது. அதனால் சில ஹீரோக்கள் ரசிகர்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி தங்களது கெத்தை காட்டி வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் தனுஷ் சென்னை அடையாறில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் தனது ரசிகர்களை சந்தித்தார். இதில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சுமார் 3,000 ரசிகர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் அங்கு வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் கமகம பிரியாணி விருந்து வழங்கியிருக்கிறார். மேலும் பெண்களுக்கு புடவைகள் குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் ஆகியவற்றையும் வழங்கி நடிகர் தனுஷ் அசத்தியிருக்கிறார்.
