‘Dj black ஓட show Fun கானது இல்லை, கண்ணிகா புரம் மண்ணுகானது’… கஷ்டப்படும் மக்களுக்காக Dj black செய்த உதவி… 

By Begam

Updated on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர் தான் பாலா. இவர் முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யார்?’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவர் இந்நிகழ்ச்சியில் தனது டைமிங் காமெடி மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

   

இதை தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கிய அவர் தற்பொழுது இந்த பிரபலத்தின் மூலம் வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். தற்பொழுது பல படங்களிலும் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் பாலா தனது பிறந்தநாளுக்கு ஒரு முதியோர் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்திருந்தார்.


இதைத்தொடர்ந்து சமீபத்தில் மீண்டும் ஒரு ஆம்புலன்ஸ் வாங்கி மலை வாழ் மக்களுக்கு கொடுத்துள்ளார். இப்படி மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் kpy பாலா. இவரைத்தொடர்ந்து தற்பொழுது Dj black கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்ய தொடங்கியுள்ளார்.

அதாவது இவர் விளையாட்டு மைதானத்தில் ஷூ கூட இல்லாமல் விளையாட கஷ்டப்படும் இளைஞர்களுக்காக தனது சொந்த செலவில் சில ஒரு சில பொருட்களை வாங்கி கொடுக்க உள்ளார். தற்பொழுது இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரது இந்த செயலை பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by Media Masons (@mediamasons)