தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போன் பே நிறுவனம் ஒரு அசத்தலான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. என்னவென்றால் தீபாவளிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடிக்கின்றனர். சில நேரம் பட்டாசு வெடிக்கும் போது காயங்கள் ஏற்படும். எனவே போன் பே நிறுவனம் ஃபயர் கிராக்கர் காப்பீடு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் 11 ரூபாய்க்கு ஆன்லைனில் இந்த காப்பீட்டை வாங்கலாம்.
ஒருவேளை பட்டாசு வெடிக்கும் போது காயம் ஏற்பட்டால் இந்த காப்பீடு மூலம் 25 ஆயிரம் ரூபாய் காப்பீடு தொகையாக கிடைக்கும். 11 ரூபாய்க்கான சிறப்பு காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்யப்பட்டவரும் அவரது குடும்பத்தினரும் சுமார் 11 நாட்களுக்கு 25,000 ரூபாய் காப்பீடு தொகையை பெறுவார்கள். விபத்து ஏற்பட்டு 24 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டி இருந்தால் அதற்கான செலவுகளை நிறுவனமே ஏற்கும்.
