போடு ரகிட ரகிட… அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்… சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 6, 2025

Spread the love

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போது ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி அனைத்து அரசு பொதுத்துறை சி, டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நிரந்தர ஊழியர்கள் குறைந்தபட்சம் 8,400 முதல் அதிகபட்சம் 16, 800 ரூபாய் வரை போனஸ் ஆக பெறுவார்கள். போனஸ் வழங்க ஏதுவாக 376 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.