BREAKING: தவெகவினர் என் மீது செருப்பை வீசினர்… திவ்யா சத்யராஜ் பரபரப்பு புகார்..!!

By Soundarya on சித்திரை 21, 2026

Spread the love

திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக் கூறி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று மாலை வீதிகளில் பிரச்சாரம் செய்தபோது இச்சம்பவம் நடந்ததாகக் குறிப்பிட்ட அவர், கருத்து வேறுபாடுகளுக்காக ஒரு பெண்ணை உடல் ரீதியாகத் தாக்குவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார். தனது சகோதரர் சிபிக்கும் எனக்கும் வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்கள் இருந்தாலும், தங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறியுள்ள அவர், ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்துக்களுக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

பெண்களை மதிக்கும்படி தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் திவ்யா சத்யராஜ் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், விஜய்யின் மனைவி சங்கீதா குறித்துப் பேசிய அவர், சங்கீதா தான் அறிந்த மிகச்சிறந்த பெண்மணிகளில் ஒருவர் என்றும், அவருக்கும் விஜய் உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் நாகரிகம் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அவர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.