பட்டப்பகலில் பதறவைக்கும் சம்பவம்… “எனக்கு இல்லனா நீ யாருக்குமே இல்ல”… முன்னாள் மனைவி முகத்தில் ஆசிட் வீசிய கணவன்…. விழுப்புரம் நடுரோட்டில் கொடூரம்….!

Spread the love

விழுப்புரம் முத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் அன்புராணி தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், இவர்கள் இருவரும் நீதிமன்றம் மூலம் நான்கு மாதங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்குப் பிறகு அன்புராணி தன் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இருப்பினும், குழந்தைகளைப் பார்க்க வேண்டும் எனக் கூறி ராமச்சந்திரன் அடிக்கடி அன்புராணியின் வீட்டிற்குச் சென்று தகராறு செய்தும், தொலைபேசியில் அழைத்துத் தொடர்ந்து தொந்தரவு அளித்தும் வந்துள்ளார்.

இந்நிலையில்தான், விழுப்புரம் திரு.வி.க வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே அன்புராணி நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த முன்னாள் கணவர் ராமச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை அன்புராணியின் முகத்தில் வீசியுள்ளார். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவத்தில் அன்புராணி படுகாயமடைந்தார். மேலும், அப்போது அவ்வழியாக நடந்து சென்ற கிருஷ்ணமூர்த்தி என்ற முதியவர் மீதும் ஆசிட் பட்டதால் அவரும் காயமடைந்தார். குற்றத்தைச் செய்த ராமச்சந்திரன் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த விழுப்புரம் நகர காவல் துறையினர், காயமடைந்த அன்புராணி மற்றும் முதியவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக அருகில் உள்ள நகராட்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இச்சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ராமச்சந்திரனை தீவிரமாகத் தேடி வருகின்றனர். விவாகரத்தான மனைவியின் மீது பட்டப்பகலில் முன்னாள் கணவரே ஆசிட் வீசிய இச்சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“பிஞ்சு குழந்தைகள் கண்முன்னே கொடூரம்…” கதறி துடித்த ஆசிரியை… வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கொன்ற வாலிபர்…. திக் திக் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள சில்ட்ரன்ஸ் அகாடமி பள்ளியில், கடந்த திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் 26…

32 minutes ago

ஹோட்டலில் ரூமில் காதலர்கள்…! “அவ செத்துட்டா…” மறு நொடியே மாயமான காதலன்…. தலை, முகத்தில் படுகாயத்துடன் காதலி…. பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஷாரான் நிகிதா டோப்னோ (23) என்ற இளம்பெண், தனது காதலன் ஸ்ரீனிவாச ரவி தேஜா…

45 minutes ago

“அலறிய 3 மாத கர்ப்பிணி மனைவி…” கழுத்தை அறுத்து கொலை செய்து மாடியில் இருந்து குதித்த கணவர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வாடகை அறை ஒன்றில், 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஆகாஷ் என்பவர், 3 மாத…

1 மணத்தியாலம் ago

“கோழைகளும் துரோகிகளுமே அப்படிச் சொல்வார்கள்”…. அமெரிக்க ஆயுதப் பற்றாக்குறை வதந்திக்கு அதிபர் ட்ரம்ப் ஆவேசப் பதிலடி…!

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இத்தகைய…

1 மணத்தியாலம் ago

“அன்பிற்குரியவர் தான்… ஆனா இது லூசுத்தனமான விமர்சனம்”…. உதயநிதியை பொளந்து கட்டிய திருமாவளவன்….!

திமுக மாநாட்டில் தவெக அரசை 'சோபா மாடல் அரசு' என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி காட்டமாக விமர்சித்த நிலையில், அதற்கு…

2 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்…. சிறுநீரகங்கள் செயலிழக்கும் ஆபத்து… மாத்திரை சாப்பிடும் முன் மத்திய அரசு வெளியிட்ட பகீர் எச்சரிக்கை….!

வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை அளவுக்கு அதிகமாகவும், மருத்துவரின் ஆலோசனையின்றியும் பயன்படுத்துவது சிறுநீரகங்களை கடுமையாகப் பாதித்து, செயலிழக்கச்…

2 மணத்தியாலங்கள் ago