திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… இன்று முதல் தரிசனம் டோக்கன் நிறுத்தம்….!

Spread the love

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் 29 இன்று முதல் சர்வ தரிசனம் டோக்கன் வழங்குவது நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு டிசம்பர் 30ஆம் தேதி அதிகாலை வைகுண்ட வாயில் திறக்கப்பட்டு ஜனவரி 8ஆம் தேதி வரை பக்தர்கள் சாமீ தரிசனம் செய்ய வைகுண்ட வாயில் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இலவச தரிசனத்தில் மட்டும் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு ஆன்லைனில் வெளியிடப்பட்ட பதிவு செய்த பக்தர்களில் குழுக்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு 1.80 லட்சம் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த டோக்கன் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் டிசம்பர் 29 இன்று இரவுக்குள் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் அனைவருக்கும் சாமி தரிசனம் செய்ய அனைத்து தரிசன வரிசைகளையும் காலி செய்யப்பட வேண்டும். எனவே திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த தரிசனத்திற்கான இலவச டோக்கன் வழங்கப்படுவது இன்று வழங்கப்பட்டு நிறுத்தப்படும். இன்று முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்படாது. ஜனவரி ஒன்பதாம் தேதி சாமி தரிசனத்திற்கான டோக்கன் எட்டாம் தேதி முதல் வழக்கம் போல வழங்கப்படும். ஜனவரி 2 முதல் ஜனவரி எட்டாம் தேதி வரை இலவச தரிசனத்தில் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்களை வரிசையில் அனுமதிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்து வைத்து வைகுண்ட வாயில் வழியாக அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

6 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

6 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

6 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

7 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

7 மணத்தியாலங்கள் ago