தொழில்துறை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான கீர்த்தனா, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இதுவரை மூன்று முறை சென்றுள்ள போதிலும் அங்கிருக்கும் தொழில் சங்கங்களை நேரில் அழைத்து பேசாதது உள்ளூர் தொழில்துறையினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் கண்டுகொள்ளாமல் அமைச்சர் அலட்சியம் காட்டுவது அவரது நிர்வாகத் திறனின்மையையே வெளிப்படுத்துகிறது என்ற கொந்தளிப்பான கருத்து நிலவி வருகிறது. இத்தகைய புகார்களின் அடிப்படையில், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் கட்சித் தொண்டர்களின் அதிருப்தியைத் தணிக்கவும் தவெக தலைமை, அமைச்சர் கீர்த்தனாவின் பதவியைப் பறிக்க தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருப்பது, மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
