“திடீர் திருப்பம்”…. தவெக கூட்டணி குறித்து CPI வீரபாண்டியன் போட்ட குண்டு…. பதறும் அரசியல் களம்…!

By Nanthini on புரட்டாதி 10, 2026

Spread the love

தவெக கூட்டணிக் குறித்த விவாதங்கள் அரசியல் களத்தில் சூடுபிடித்துள்ள நிலையில், இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) நிலைப்பாட்டை மூத்த தலைவர் வீரபாண்டியன் வெளிப்படையாகத் தெளிவுபடுத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பேசிய அவர், தற்போதைய அரசியல் சூழலில் வலுவான கூட்டணி அமைப்பது மிகவும் அவசியமான ஒன்று என்பதைத் தங்கள் கட்சி கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். மேலும், தவெக  கூட்டணியில் அங்கமாக உள்ள விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மதிமுக ஆகிய தோழமைக் கட்சிகள் தங்களுக்குள் ஓர் வலுவான பிணைப்பை உருவாக்கியுள்ளன என்றும், தற்போதைய நிலையில் சிபிஐ கட்சி இந்த அமைப்பிற்கு வெளியில் இருந்து தனது முழு ஆதரவை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் நகர்வுகள் மற்றும் வரவிருக்கும் தேர்தல் வியூகங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த வீரபாண்டியன், வரும் இடைத்தேர்தல் குறித்து தங்களது கட்சியின் இறுதி நிலைப்பாடு என்ன என்பதை விரைவில் முறைப்படி அறிவிப்போம் என்று உறுதியளித்தார். தவெகவின் புதிய வரவு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வரும் சூழலில், கம்யூனிஸ்ட் கட்சியின் இந்தத் தெளிவான மற்றும் நிதானமான அணுகுமுறை அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கூட்டணிக் கட்டமைப்பு மற்றும் வெளியிலிருந் அளிக்கும் ஆதரவு தொடர்பான வீரபாண்டியனின் இந்தப் பேச்சு, வரும் காலங்களில் தமிழகத்தின் கூட்டணி அரசியலில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.