அடேங்கப்பா…! உலகத்துலயே விசித்திரமான சட்டம்… ஒரு ஹார்ன் சத்தத்துக்கு ரூபாய் 5 லட்சம் ஃபைனா?… விலங்குகளின் தூக்கத்திற்கு தடை போட்டால் ஜெயில் உறுதி…!!

Spread the love

நார்வே நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்கள் இணையும் பகுதியில் அமைந்துள்ள ஸ்வால்பார்ட் தீவுக்கூட்டங்கள் முழுவதும் பனியால் சூழப்பட்டவை. இங்கு அதிக அளவில் பனிக்கரடிகள் வாழ்கின்றன. சமீபத்தில் இப்பகுதியில் படகு ஓட்டிச் சென்ற ஒருவர், கரையில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த பனிக்கரடியை வேடிக்கை பார்ப்பதற்காக வேண்டும் என்றே பெரும் சத்தத்தை எழுப்பும் ‘ஹார்ன்’ அடித்து அதன் தூக்கத்தை கலைத்துள்ளார். இந்த அத்துமீறலுக்காக அவருக்கு இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விலங்கின் தூக்கத்தை கலைத்ததற்கு இவ்வளவு பெரிய தொகையா என ஆச்சரியமாக இருக்கலாம்; ஆனால் அங்குள்ள சட்டம் அவ்வளவு கண்டிப்பானது. கடந்த காலங்களில் பனிக்கரடிகளின் எண்ணிக்கை கணிசமாக குறையத் தொடங்கியதால், 1972-ஆம் ஆண்டு முதல் அங்குள்ள பனிக்கரடிகள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக அறிவிக்கப்பட்டன. அதன்படி, பனிக்கரடிகளை எந்த வகையிலும் தொந்தரவு செய்வதோ, வேடிக்கை பார்க்க அச்சுறுத்துவதோ அல்லது விரட்டுவதோ கடுமையான சட்டவிரோதக் குற்றமாகக் கருதப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ஸ்வால்பார்ட் ஆளுநர் நடத்திய விசாரணையில், சத்தம் கேட்டதும் பனிக்கரடி அலறியடித்து ஓடுவதை ரசிப்பதற்காகவே படகு ஓட்டுநர் வேண்டுமென்றே இந்த செயலில் ஈடுபட்டது உறுதியானது. இதனையடுத்து அவருக்கு 50,000 நார்வேஜியன் குரோனர் அபராதம் விதிக்கப்பட்டு, அவரும் அதனை செலுத்த சம்மதித்துள்ளார். வனவிலங்குகளை தொந்தரவு செய்ததற்காக அங்கு இத்தகைய தண்டனை வழங்கப்படுவது இது முதல் முறையல்ல; முன்னதாக கடந்த 2024-ஆம் ஆண்டில் வால்ரஸ் விலங்கின் மிக அருகே சென்ற ஒரு சுற்றுலாப் பயணிக்கும் இதேபோன்று ஒரு லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Gayathri

Recent Posts

“அமெரிக்க வீரர்களை கொன்றால் $30,000…. வீராங்கனைகளுக்கு $60,000″…. ஈரானின் பகீர் அறிவிப்பு…. உலக நாடுகள் அதிர்ச்சி….!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் தீவிர மோதல்களுக்கு மத்தியில், நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்யும்…

6 minutes ago

100வது நாளில் புதிய புரட்சி…. பத்திரப்பதிவுத் துறையை மொத்தமாக டிஜிட்டலாக மாற்றிய புதிய திட்டம்…. ‘ஸ்டார் 3.0’ மூலம் இனி நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை….!

தமிழக பத்திரப்பதிவுத் துறையில் பொதுமக்களின் வசதிக்காக 'ஸ்டார் 3.0' மென்பொருள் மூலம் பல்வேறு டிஜிட்டல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்…

11 minutes ago

துரைமுருகன் பதவி பறிப்பு?…. உதயநிதிக்கு புதிய பதவி… கொந்தளிக்கும் சீனியர்கள்…. திமுகவில் அடுத்தடுத்து காத்திருக்கும் டுவிஸ்ட்…. அலறும் அறிவாலயம்….!

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக அமைத்த மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் நோக்கில் உயர்நிலைச் செயல்திட்டக் குழு மற்றும்…

15 minutes ago

ஒரே மாதத்தில் 5 கொடூரக் கொலைகள்…. தமிழக சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறதா?…. விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல்…. உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்…..!

தமிழகத்தில் அண்மைக்காலமாக பள்ளி, கல்லூரி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் அரங்கேறி வரும் தொடர்ச்சியான வன்முறைச் சம்பவங்களும் படுகொலைகளும் பொதுமக்கள்…

20 minutes ago

JUST IN: தவெக ஆட்சி கவிழ்ந்து விடும்.. சபாநாயகர் கூறினார்…. பேரவையில் மரண மாஸ் பதிலடி….!

இன்றைய சட்டமன்ற அலுவலில் உரையாற்றிய சபாநாயகர் JCD பிரபாகர், தவெக அரசின் 100 நாள் சாதனைகளைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்குப்…

24 minutes ago

சென்னை, கோவை டூ கர்நாடகா வரை…. 5 முக்கிய பிரச்சனைகளை கையில் எடுத்த உதயநிதி ஸ்டாலின்…. சட்டப்பேரவையை உலுக்கிய விவகாரம்….!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…

28 minutes ago