சட்டமன்றத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் காட்சிகள்…. 4 MLA-க்களின் பதவி ஊசலாடுகிறதா?… நவம்பர் 17-ல் மெகா க்ளைமாக்ஸ்….!

By Nanthini on கார்த்திகை 10, 2026

Spread the love

சட்டப்பேரவையில் கொறடா உத்தரவை மீறிச் செயல்பட்டதாகக் கூறப்படும் 4 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்யக்கோரி அளிக்கப்பட்ட புகார் மனு மீது பேரவைச் சபாநாயகர் அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளார். இப்புகார் தொடர்பாக இன்று நடைபெற்ற முதற்கட்ட விசாரணையின்போது, சபாநாயகர் முன்பாக அதிமுக எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் நேரில் ஆஜராகித் தங்களது விளக்கங்களை அளித்தனர். அதேவேளையில், கட்சியின் சார்பில் அதிமுக பேரவைக் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை ஆகியோரும் விசாரணையில் பங்கேற்றுத் தங்களது தரப்பு வாதங்களையும் ஆதாரங்களையும் முன்வைத்தனர்.

இந்தத் தகுதிநீக்கப் புகார் மனு மீதான விசாரணை தொடர்ந்து 3 நாள்கள் தீவிரமாக நடைபெறவுள்ளது. இரு தரப்பினரின் கருத்துகள், ஆவணங்கள் மற்றும் விளக்கங்கள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்த பிறகு, இப்புகார் தொடர்பான தனது இறுதி முடிவை நவம்பர் 17-ஆம் தேதியன்று சபாநாயகர் முறைப்படி அறிவிக்கவுள்ளார். சபாநாயகரின் இந்த முடிவு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.