“சீட் இல்லைன்னா என்ன, கவலைப்படாதீங்க”… நேர்காணலுக்கு வந்தவர்களிடம் இபிஎஸ் கொடுத்த ரகசிய வாக்குறுதி…

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. 10,000-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு அளித்துள்ள நிலையில், 9-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தொகுதி வாரியாக நேர்காணல்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த நேர்காணலில் கே.பி. முனுசாமி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் பங்கேற்று, கட்சிப் பணி மற்றும் மக்கள் சேவை குறித்த கேள்விகளைத் தொண்டர்களிடம் எழுப்பி வருகின்றனர்.

இருப்பினும், இந்த நேர்காணல் முறை விருப்பமனு அளித்தவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தனித்தனியாக நேர்காணல் நடத்தப்படாமல், ஏழு அல்லது எட்டு தொகுதிகளைச் சேர்ந்தவர்களை ஒட்டுமொத்தமாக அழைத்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் என்றும், இது ஒரு நேர்காணல் போல இல்லாமல் வெறும் ‘சம்பிரதாயமான’ சந்திப்பாகவே முடிந்துவிடுவதாகவும் அதிமுகவினர் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். தங்களின் தனிப்பட்ட உழைப்பையும், தொகுதியின் கள நிலவரத்தையும் விரிவாக எடுத்துரைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே இவர்களின் பிரதான புகாராக உள்ளது.

இந்த அதிருப்திகளை உணர்ந்த எடப்பாடி பழனிசாமி, நேர்காணலில் பங்கேற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசி வருகிறார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு, கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு வாரியப் பதவிகள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் உரிய முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார். மேலும், கூட்டணி விவகாரங்கள் குறித்தும், வரும் நாட்களில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர் சூசகமாகத் தெரிவித்ததுடன், கட்சி அறிவிக்கும் வேட்பாளரின் வெற்றிக்காக அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Nanthini

Recent Posts

திடுக்கிடும் திருப்பம்… படப்பிடிப்பில் பிரபுதேவா செய்த எதிர்பாராத செயல்… அலறித் துடித்த நடிகை… இணையத்தில் ஷாக்கிங் பதிவு…!

பிரபல குணசித்திர நடிகையான செந்தில்குமரி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் பிரபுதேவாவுடன் தான் இணைந்து நடித்த திரைப்பட அனுபவங்களை…

9 minutes ago

அடச்சீ… இது ஒரு பொழப்பா?… சார்னு கூப்பிடாதடா… நான் உன் ஃபிரண்டு… சிறுவனைப் போல் நடித்து… 100+ சிறுமிகளின் வாழ்க்கையைச் சீரழித்த ஆசிரியர்… போலீசிடம் சிக்கியது எப்படி?…

நியூ ஜெர்சியில் உயர்நிலைப் பள்ளி சமூக அறிவியல் ஆசிரியராகவும் கால்பந்து பயிற்சியாளராகவும் பணிபுரிந்த 38 வயதான ரியான் மெக்காஃபெரி, இணையத்தில்…

18 minutes ago

அட கொடுமையே… லைக்ஸுக்காக இந்த வெறியா?… நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து… இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் கைது… திருநெல்வேலியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள பிரபல ஜவுளிக்கடையின் பின்புறமுள்ள வயல்வெளியில், நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்து அதனை வீடியோவாகப்…

40 minutes ago

திக் திக் திக்… கார் , நகையை தர்றியா?… இல்ல வெட்டட்டுமா?… மதுபோதையில் நண்பனை பட்டாக்கத்தியால் வெட்டிச் சாய்த்த கொடூரம்…!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே பணம், கார் மற்றும் நகை கொடுக்கல் வாங்கல் தகராறில் நண்பரைக் கொடூரமாக வெட்டிக் கொலை…

45 minutes ago

ஐயோ… லஞ்சம் வாங்கியதா காவல்துறை?… ஆய்வாளர் வீட்டில் கட்டுக் கட்டாக… எண்ணப்பட்ட 500 ரூபாய் நோட்டுகள்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!

தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை பங்குதாரர் பிரச்சினை தொடர்பாக ஒரு தரப்பினருக்கு ஆதரவாகச் செயல்பட்டு ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக…

57 minutes ago

நீங்க என்ன டாக்டரா?… “ஒரு பெண்ணோட வலி தெரியுமா?”… ஜூலி விவகாரத்தில் பொங்கி எழுந்த கூல் சுரேஷ்… இணையத்தில் புயல்…!!

பிக் பாஸ் புகழ் ஜூலி தற்போது கர்ப்பமாக இருக்கும் சூழலில், அவரது கர்ப்ப காலத்தை தவறாக கணக்கிட்டு சமூக வலைதளங்களில்…

59 minutes ago