பொதுவாக நம் அனைவருக்கும் நோய்எதிர்ப்பு சக்தி மஞ்சளில் எந்த அளவிற்கு உள்ளது என்பது தெரியும். ஆனால் அதை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் அதில் பக்க விளைவுகள் உள்ளது. மஞ்சளால் உண்டாகும் நன்மை தீமைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். எந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மஞ்சளை தொடக்கூடாது என்று தெரிந்து கொள்ளுங்கள். தினந்தோறும் உணவில் மூன்று கிராம் அளவில் மட்டுமே மஞ்சளை சேர்த்துக் கொள்ள வேண்டும் .சிலருக்கு பித்தப்பையில் பிரச்சனை இருக்கும் இப்படி இருப்பவர்கள் மஞ்சளை அதிகமாக சாப்பிடக்கூடாது. மஞ்சள் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இரப்பை, உணவு குழாய் கோளாறு இருப்பவர்கள் இதை தவிர்க்க வேண்டும். சிலருக்கு கல்லீரல் பிரச்சினை இருக்கும் இவர்களும் மஞ்சள் உட்கொள்வது குறைக்க வேண்டும். மேலும் மஞ்சளை உடல் தவிர்த்து பிற ஆரோக்கியத்திற்கு முக அழகிற்கும் பயன்படுத்தலாம். மூட்டு வலி இருப்பவர்கள் ஒரு டம்ளர் தண்ணீரில் மஞ்சள் கலந்து குடிப்பது மூட்டு வலியை குணப்படுத்தும். மஞ்சள் உள்ள குர்குமின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ஆரோக்கியத்தை காக்கும். மஞ்சளை தண்ணீருடன் கலந்து குடிக்கும் போது அதன் வளர்ச்சிக்கு மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
