காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக்… திமுகவில் இருந்து கூண்டோடு விலகிய முக்கிய புள்ளி… ஒரே நாளில் 1000 பேர் அதிமுகவில் ஐக்கியம்…!

By Nanthini on கார்த்திகை 27, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டே வருகிறது. என்னதான் கூட்டணி பலமாக இருந்தாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியை தீவிர படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் திமுகவின் சிவகாசி மாநகர தொழிலாளர் பிரிவு அமைப்பாளர் நாகராஜன், ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் பட்டாசு தொழிலதிபர் சந்தன பாண்டியன் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் அதிமுகவில் இணைந்துள்ளனர். 2021 தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.