நடிகர் அஜீத்குமார் கார் ரேஸில் தீவிர ஆர்வம் காட்டி பங்கேற்று வருகிறார். அவரது ரேசிங் மீதான ஆர்வம் மற்றும் கார் பந்தயங்களில் அவர் செய்த சாதனைகள் குறித்த ஆவணப்படம் உருவாகி வருகிறது. இந்த ஆவணப் படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் டைரக்ட் செய்து வருகிறார். அவரது இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் இசையில் இந்த ஆவணப்படம் தயாராகி வருகிறது. ரேஸிங் இஸ் நாட் ஆக்டிங் என்ற டைட்டிலில் உருவாகும் இந்த ஆவணப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்த ஆவணப்படம் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரேஸிங் இஸ் நாட் ஆக்டிங் ஆவணப்படத்தின் இயக்குனர் ஏஎல் விஜய் மற்றும் இயக்குனர்கள் சிறுத்தை சிவா ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் விஷ்ணுவர்த்தன் ஆகியோர் நடிகர் அஜீத்குமாரை நேரில் சந்தித்து வாழ்த்துகள் கூறினர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அஜீத்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்ததாக நடிகர் அஜீத்குமார் நடிக்கும் அவரது 64வது படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.
