ஒரே நாளில் 2000 பேர் அதிமுகவில் ஐக்கியம்… செம குஷியில் துள்ளும் எடப்பாடி… அதிரும் தமிழக அரசியல் களம்…!

By Nanthini on தை 5, 2026

Spread the love

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த அதிமுக 2026 ஆம் ஆண்டு வெற்றிவாகை சூட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. அதற்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் மீண்டும் அதிமுக ஆட்சியைப் பிடிப்பதற்கு பல வியூகங்களை வகுத்து வருகின்றார். அதேசமயம் அதிமுகவில் தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை கட்சியிலிருந்து தூக்கி வீசி வருகிறார். சமீபத்தில் கூட மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கட்சியில் கூட்டணி முடிவுகளையும், மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியையும் ஈபிஎஸ் தீவிர படுத்தியுள்ளார்.

இந்நிலையில் சேலம் வீரபாண்டியில் நடைபெற்ற எழுச்சி பயணத்தில் இபிஎஸ் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் 2000 பேர் அதிமுகவில் இணைந்தனர். இந்த முக்கிய நிகழ்வை தவிர்க்க முடியாததால்தான் நேற்று தமிழக மந்த அமித்ஷாவை இபிஎஸ் சந்திக்கவில்லை என்கின்றனர். இருவரும் இன்று திருச்சியில் சந்திக்க உள்ளதாக தகவல் கசிந்து உள்ளது.