பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு ரிலீசான பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதால் வெற்றிமாறனுக்கு அடுத்தடுத்த படங்களை இயக்கும் வாய்ப்பு வந்தது.
ஆடுகளம், காக்கா முட்டை, வட சென்னை உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஒவ்வொருவருக்கும் பிடித்தமான ஒரு ஹாபி இருக்கும். அந்த வகையில் வெற்றிமாறனுக்கு பறவை பந்தயத்தில் கலந்து கொள்வது ரொம்ப பிடிக்குமாம். சமீபத்தில் வெற்றிமாறன் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் உங்களைப் பற்றி கூறுங்கள் என சொல்கிறார். வெற்றிமாறன் தான் ஒரு இயக்குனர். இந்தியாவை சேர்ந்தவர் என கூறுகிறார். புறா பந்தயத்தில் இந்தியாவுக்கும் யூரோப்புக்கும் இருக்கும் வேறுபாடுகளை அவர் கேட்கிறார். அதற்கு பதில் அளித்த வெற்றிமாறன், புறா பந்தயம் என்னோட ஹாபி. என்னோட ப்ரொபஷனல் ஃபிலிம் மேக்கிங். எங்களிடம் ப்ரொபஷனல் ரேசர்ஸ் இருக்காங்க.
ஆனா புறா பந்தயத்தை நாங்க ப்ரொபஷனலா எடுத்துக்கிறது கிடையாது. அது ஒரு ஹாபி. எங்க எல்லாருக்கும் தனியா ப்ரொபஷனல் இருக்கு. இப்போ ஒரு சில ஆண்டுகளா அது டெவலப் ஆயிருக்கு. பந்தங்களும் ப்ரொபஷனலா மாறிக்கிட்டு இருக்கு. மிகப்பெரிய பந்தயங்களும் நடத்தப்படுது. இந்த வருஷம் 200 கிலோமீட்டர் புறா பந்தயத்தில் அதிக எண்ணிக்கையிலான 4,600 புறாக்களை ஒரே இடத்தில பறக்க விட்டனர் என பேசியுள்ளார்.