மையா மையா பாடலுக்கு கலக்கலாக டான்ஸ் ஆடிய ஆர்யா மனைவி.. வைரலாகும் வீடியோ..!!

By Priya Ram on செப்டம்பர் 27, 2024

Spread the love

நடிகை சாயிஷா கடந்த 2005-ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் ரிலீசான கஜினி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனை அடுத்து கடந்த 2007-ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் ரிலீசான வனமகன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

   

கஜினிகாந்த் படத்தில் நடிக்கும் போது ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு அரியானா என்ற மகள் உள்ளார். வனமகன் படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு சாயிஷா அசத்தலாக டான்ஸ் ஆடி இருப்பார்.

   

 

அதேபோல கார்த்தி உடன் இணைந்து கடை குட்டி சிங்கம் படத்திலும் க்யூட்டாக ஆடி ரசிகர்களை கவர்ந்திருப்பார். விஜய் சேதுபதி உடன் ஜுங்கா சூர்யாவுடன் காப்பான் ஆகிய திரைப்படங்களிலும் சாயிஷா நடித்துள்ளார். திருமணம் ஆன பிறகு சிம்பு நடிப்பில் ரிலீசான பத்து தல திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு சாயிஷா குத்தாட்டம் போட்டார்.

சாயிஷாவுக்கு டான்ஸ் மீது அதிக ஆர்வம். இந்த நிலையில் ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியான மையா மையா பாடலுக்கு டான்ஸ் ஆடி சாயிஷா வீடியோ எடுத்துள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சாயிஷா அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sayyeshaa (@sayyeshaa)

author avatar
Priya Ram