“நாங்கள் உங்களோடு நிற்கிறோம்…இந்த முறை நீட்டை விடக்கூடாது…” மாணவர்களுக்கு ஆதரவாக இயக்குனர் வெற்றிமாறன் அதிரடி பேச்சு…!!

By Devi Ramu on ஆடி 24, 2026

Spread the love

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராகச் சீரிய முறையில் போராடிய இளைஞர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து சென்னை எழும்பூரில் நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், அமீர் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், இளைஞர்கள் தெருவில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டதே மத்திய அரசின் தோல்வியைக் காட்டுகிறது என்றும், இம்முறை நீட் தேர்வை முற்றிலும் தடை செய்யும் வரை போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், மாணவர் அமைப்புகள் நடத்தும் நீட் எதிர்ப்புப் போராட்டங்களுக்குத் தான் என்றென்றும் உறுதுணையாக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.