தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் அண்மையில் வெளியான விடுதலை 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிக்கிறார். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். வாடிவாசல் படத்திற்கான அனிமேஷன் பணிகள் லண்டனில் நடைபெற்ற வரும் நிலையில் இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்தாலும் அதற்கான படப்பிடிப்பு தற்போது வரை தொடங்கவில்லை.

நடிகர் சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் பேட்டைக்காரன் படத்தில் பிசியாக நடித்து வருவதால் இந்த படத்தை முடித்த பிறகு தான் வாடிவாசல் படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று தெரிகிறது. இதன் காரணமாக தற்போது மற்றொரு மாஸ் படத்தை இயக்க வெற்றிமாறன் தயாராகி வருகிறார்.

கே ஜி எஃப் திரைப்படத்தை மையமாக வைத்து வெற்றிமாறன் அந்த படத்தை எடுக்க உள்ளாராம். அதற்கான ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் விடுதலை படத்தை தயாரித்த எல் ரெட் குமார் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில் வெற்றிமாறன் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் வெற்றிமாறன் மற்றும் ஆர்த்தி தம்பதியினருக்கு பூந்தென்றல் மற்றும் கதிரவன் என ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

லயோலா கல்லூரியில் படிக்கும் போது ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் வெற்றிமாறன். இதனிடையே சமீபத்தில் வெற்றிமாறன் தனது மனைவியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார். அப்போது தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் அதில் வெற்றி மாறனின் மகளை பார்த்த ரசிகர்கள் வெற்றிமாறனுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காரா என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
