அவன் செத்தாதான இம்பேக்ட் அதிகமாக இருக்கும்.. ஷூட்டிங் ஸ்பாட்ல கதையையே மாத்தினேன் – இயக்குனர் பாலா பகிர்ந்த தகவல்!

By vinoth on பங்குனி 18, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகளில் ரௌத்திரத்தை ஏற்றி பார்வையாளர்களை திகைத்துப் போக வைக்கும் படங்களை எடுத்தவர் இயக்குனர் பாலா. அவர் இயக்கிய சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற படங்கள் அவற்றின் உருவாக்கத்தால் இன்றளவும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன. என்னதான் ரௌத்திரமாக இருந்தாலும் அவர் கதைகளின் அடிநாதமாக இருப்பது அன்புதான்.

அவர் படங்களில் நடித்த பின்னர்தான் விக்ரம், சூர்யா மற்றும் ஆர்யா ஆகியோர் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்தனர். அதனால் அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதில் பல இளம் ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தார்கள். அவர் படங்களில் கதாநாயகர்கள் பெரிய அளவுக்கு உயர்ந்தாலும், கதாநாயகிகள் போன இடம் தெரியாமல் காணாமல் போனார்கள்.

   

இயக்குனர் பாலாவுக்கு சமீபகாலமாக திரைவாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. அவர் இயக்கிய தாரை தப்பட்டை படம் அட்டர் ப்ளாப் ஆனது. வர்மா படம் அவர் இயக்கியது பிடிக்கவில்லை என்று மீண்டும் வேறொரு இயக்குனரால் இயக்கப்பட்டது. அதே போல சூர்யாவை வைத்து அவர் முதலில் இயக்கிய வணங்கான் படத்தில் இருந்து வெளியேறினார். இதையடுத்து அருண் விஜய்யை வைத்து அவர் வணங்கான் படத்தை ரிலீஸ் செய்துள்ளார். அந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றுள்ளது.

   

 

பாலா படங்களில் கண்டிப்பாக முக்கியக் கதாபாத்திரம் எதாவது ஒன்று இறந்துவிடும். இதை அவர் தொடக்கம் முதல் இப்போது வரை தன்னுடைய டெம்ப்ளேட்டாக வைத்திருப்பார். அப்படி அவர் இயக்கிய ‘அவன் இவன்’ திரைப்படத்தில் ஹைனஸாக நடித்த ஜி எம் குமார் க்ளைமேக்ஸுக்கு முன்னர் கொலை செய்யப்பட, அவரின் இறப்புக்கு ஆர்யா மற்றும் விஷால் கதாபாத்திரம் வில்லனைப் பழிவாங்கும்.

இந்த படம் பற்றி சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார் பாலா. அதில் “அவன் இவன் படத்தில் முதலில் ஹைனஸ் கதாபாத்திரம் இறப்பது போல எழுதவில்லை. ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஜி எம் குமார், அந்த கதாபாத்திரத்தை நடிக்கும் போது அவரிடம் வெளிப்பட்ட வெகுளித்தனம் எனக்குப் பிடித்தது. அதனால் இவர் இறந்தால்தானே இம்பேக்ட் அதிகமாக இருக்கும் என்று அதன் பிறகு கதையை மாற்றினேன்” எனக் கூறியுள்ளார்.