#image_title
தமிழ் சினிமாவில் முரட்டு சிங்கிளாக சுற்றி வந்த பிரேம்ஜிக்கு திருமணம் என்ற பத்திரிக்கை வைரலானதை தொடர்ந்து அவரது அண்ணன் வெங்கட் பிரபு ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர் பிரேம்ஜி சிம்பு நடிப்பில் வெளிவந்த வல்லவன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதை தொடர்ந்து பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அவரின் அண்ணன் வெங்கட் பிரபு இயக்கம் பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நடித்து விடுவார். கடந்த ஆண்டு வெளியான சத்திய சோதனை என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகவும் நடித்து அசத்திய இருந்தார்.
பிரேம்ஜியும் அவரது அண்ணன் வெங்கட் பிரபுவும் பிரபல இசை அமைப்பாளரான கங்கை அமரன் அவர்களின் மகன் ஆவார். அந்த அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்த இவர்கள் தற்போது சிறந்த பிரபலங்களாக வலம் வருகிறார்கள். தமிழ் சினிமாவில் முரட்டு சிங்கிளாக சுத்தி வருபவர் பிரேம்ஜி தனக்கு திருமணமே வேண்டாம் என்று கூறி வந்தவர் எப்படியோ திருமணம் செய்ய சம்மதித்து விட்டார்.
கடந்து சில மாதங்களுக்கு முன்பு பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் அது காதல் திருமணம் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு திருமண பத்திரிகை ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. அதன்படி வருகிற ஜூன் ஒன்பதாம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் பிரேம்ஜி மற்றும் இந்து என்பவருக்கு திருமணம் நடைபெற உள்ளது என்று பத்திரிக்கை வெளியானது.
இந்நிலையில் அவரின் அண்ணன் வெங்கட் பிரபு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கின்றார். அதில் அவர் தெரிவித்ததாவது “பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ என்ற உங்கள் கேள்விக்கு பதில் வரும் ஒன்பதாம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை அம்மாவின் ஆசியுடன் கரம் பிடிக்கின்றார்.
அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும் நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த இருக்கின்றோம். இது தெரியாமல் நண்பர் ஒருவர் அவரின் திருமண பத்திரிகையை பொதுவெளியில் பகிர்ந்து விட்டார். அந்த பத்திரிக்கை எப்படி வைரலானதோ அதேபோல் மணமகள் மீடியாவை சேர்ந்தவர் என பல விஷயங்கள் உலாவுகின்றது. மணமகள் மீடியாவை சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படத்தை பகிர்கிறேன். எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்திலிருந்து மணமக்களை வாழ்த்தி அதையும் வைரல் ஆக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். திருமண வரவேற்பில் கட்டாயம் அனைவரையும் சந்திப்போம் என்று கூறியிருந்தார்.
நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றாலோ அல்லது வேலையை விட்டு நீக்கப்பட்டாலோ, அந்த…
அமெரிக்காவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வரும் நிதின் மல்ஹோத்ரா என்ற இந்தியர், அங்குள்ள மருத்துவக் கட்டணங்களின் கொடூர நிதர்சனத்தைச்…
இரவு நேரத்தில் பெய்த கனமழைக்கு நடுவே, வாலிபர் ஒருவர் தனது பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பைக்கின் பின்னால் அமைக்கப்பட்டிருந்த…
நலசோபரா கிழக்கு பகுதியிலுள்ள ஒய்.பி. நகர் டெரஸில் கிரில் அமைப்பது தொடர்பாக இரு குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதிநாத்தின் வருகையின்போது, 9 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 10 வயது…
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…