Connect with us

விஜய்க்கு அது தெரியாது.. ரசிகர்களை ஏமாற்றுவது தான் சினிமா.. வெங்கட் பிரபு ஓப்பன் டாக்..!!

CINEMA

விஜய்க்கு அது தெரியாது.. ரசிகர்களை ஏமாற்றுவது தான் சினிமா.. வெங்கட் பிரபு ஓப்பன் டாக்..!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படம் நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜயின் இளம் வயது கதாபாத்திரம் De-Aging தொழில்நுட்பம் உதவியுடன் உருவாகியுள்ளது. இதுபோக பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

   

படம் ரிலீஸ் ஆக உள்ளதால் படக் குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். சமீபத்தில் வெங்கட் பிரபு அளித்த பேட்டியில் கூறியதாவது ஆரம்பத்தில் கோட் என்று சொன்னபோது விஜய் சாருக்கு அது என்னன்னே தெரியல. அதுக்கு அப்புறம் தான் நான் சொன்னேன் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை தான் கோட் என சொல்கிறோம்.

   

 

இப்போதிருக்கும் தலைமுறையினர் இப்படி வைத்து கொள்கிறார்கள் எனக் கூறினேன். விஜய் சார் அப்படியா? இது பற்றி எனக்கு தெரியாது என கூறினார். அவர் சிம்பிளாக இருப்பார். அவருக்கு தெரியவில்லை என்றால் ஓபன் ஆக கூறிவிடுவார். இதனையடுத்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒரு காட்சியில் பார்க்கும் போது விஜய் மீசை, தாடியுடன் இருக்கிறார். இன்னொரு கட்சியில் பார்க்கும் போது கிளீன் ஷேவ் செய்து இருக்கிறார்.

விஜய் சாரை பார்க்க எங்களுக்கு வித்தியாசமாக உள்ளது. அது எப்படி மேனேஜ் செய்ய முடிந்தது என கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு சினிமா என்பது ஒரு மேஜிக். உங்களை ஏமாற்றுவது தான் சினிமா. உங்கள நம்ப வைக்கிறது தான் சினிமா. உங்கள நம்ப வைக்கணும் உங்களை வேறு ஒரு உலகத்துக்கு கூட்டிட்டு போனும் அப்படின்னு நிறைய விஷயம் இருக்கு என கூறியுள்ளார்.

author avatar
Priya Ram

More in CINEMA

To Top